குஜராத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை அண்மையில் PM மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. தொடங்கிய 2 மாதத்தில் அந்த ரயில் இதுவரை 4 முறை விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் பாதையில் மாடுகள் மேய்வதை தடுக்க தண்டவாளத்தின் இருபக்கமும் தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மும்பை-காந்திநகர் இடையே 620 கி.மீக்கு 264 கோடி செலவில் தடுப்பு வேலி அமைக்க உள்ளதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.