Categories
மாநில செய்திகள்

இனி உங்க வீடு தேடி வரும்…. ரேஷன் அட்டைதார்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் மலிவு விலையிலும் இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியம். ரேஷன் கார்டில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அதனை முதலில் வாங்குவது மிகவும் சிரமமான ஒன்று தான். அதனால் மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் பயனாளிகளை வந்து சேரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ரேஷன் கார்டை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசிடம் உணவு வழங்கல் துறை அனுமதி கேட்ட நிலையில் அதனை பரிசளித்த தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதனால் இனி ரேஷன் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது அது வாடிக்கையாளரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் விண்ணப்ப படிவத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்தல், அதற்கு அஞ்சல் கட்டணமாக 25 ரூபாயை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.

நகல் கார்டுக்கு 20 ரூபாய் கட்டணமும், அஞ்சல் கட்டணத்திற்கு 25 ரூபாய் என மொத்தம் 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் எவ்வித அச்சமும் இல்லாமல் உங்கள் வீட்டிற்கே அஞ்சல் மூலமாக ரேஷன் கார்டு வந்து சேரும். இந்த அறிவிப்பை பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |