Categories
தேசிய செய்திகள்

இனி உங்கள் வீட்டிலேயே…. 2 நிமிடங்களில் பரிசோதனை…. 15 நிமிடத்தில் முடிவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் ஒரேவழி என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் எவ்வளவுக்கு எவ்வளவு பரிசோதனைகள்  விரைந்து செய்யப்படுகிறதோ? அந்த அளவுக்கு நோயிலிருந்து தப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சிலர் பயத்தின் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிலேயே சுயமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கூடிய கருவியை புனேவை சேர்ந்த மைலேப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கு கோவி செல்ப்  என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கருவிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த கருவி விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனுடைய விலை ரூபாய் 250 ஆகும். கர்ப்பத்தை தெரிந்து கொள்ள பயன்படுத்தும் ஹோம் டெஸ்ட் கிட் அடிப்படையிலான இந்த கருவியை பயன்படுத்தி இரண்டு நிமிடங்களில் பரிசோதனை செய்து விடலாம் எனவும், அடுத்த 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகள் தெரிந்துவிடும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |