Categories
தேசிய செய்திகள்

இனி இலவச உணவு கிடையாது?…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் துறை இதற்காக பரிந்துரைத்த நிலையில் விரைவில் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனால் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை செப்டம்பர் மாதத்திற்கு மேல் நீட்டிக்க கூடாது என்று செலவினத்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த திட்டம் மூலமாக நாட்டில் நிதி சுமை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டதால் வருவாயில் ஒரு லட்சம் கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் நிவாரணம் வழங்கினால் நிதி சுமை மேலும் அதிகரிக்கும் என்பதால் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் இலவச ரேஷன் திட்டத்தை நிறுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டால் உணவு மானிய செலவு 80 ஆயிரம் கோடி அதிகரித்து சுமார் 3.7 லட்சம் கோடியாக உயரும் என்று செலவீனத்துறை கூறுகிறது. எனவே செப்டம்பர் மாதத்திற்கு பிறகு இந்த திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |