பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் தேசிய கொடியை பறக்க விடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நமது தேசிய கொடியை சூரிய உதயத்திலிருந்து பறக்கவிட்டு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக இறக்கி விட வேண்டும் இதுதான் நடைமுறை. ஆனால் இப்போது இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடியை பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரத்திலும் பறக்கவிடலாம். இதற்காக இந்திய தேசியக்கொடி சட்டம் 2002ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் எந்திரத்தால் செய்த தேசிய கொடிக்கும், பாலிஸ்டர் தேசியக்கொடிக்கும் அனுமதி அளிக்கப்பட்டது இல்லை.
இப்போது இந்த சட்டமும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேசியக்கொடி கைகளால் செய்யப்பட்டதாக இருந்தாலும், இயந்திரத்தால் செய்யப்பட்டதாக இருந்தாலும், அது பருத்தி, பாலிட்டர், கம்பிளி, பட்டு காதி ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கீழ் வருகிற பல்வேறு அமைப்புகள் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த தகவலை பரப்பி விட வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளது.
நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்த சுதந்திர தினம் ஆசாதிக்கா அம்ரித் மகா உட்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. அதாவது சுதந்திர தின அமுதா பெருவிழா என்று கொண்டாடப்படுகின்றது. அதன்படி ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.