Categories
மாநில செய்திகள்

இனி இப்படித்தான்…. நீட் தேர்வு முறைகேடை தடுக்க புதிய பிளான்….. அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ….!!!

கேரள மாநிலத்தில் ரஷீத் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மருத்துவ படிப்பிற்கு சேரும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தவறுதலாக என்னுடைய பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. என்னிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதாக கூறி 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப் பட்டாலும், உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் நான் கைது செய்யப்பட்டுள்ளேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி நீட் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில்  ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களை தனித்தனியாக வீடியோ பதிவு செய்வதுடன், ஹால் டிக்கெட்டில் இருக்கும் புகைப்படமும் தேர்வு எழுத வரும் நபரின் புகைப்படமும் சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பாளர் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு கண் விழித்திரை பதிவு, கவுன்சிலிங் நடைபெறும் போது கைரேகை பதிவு, தேர்வு மையத்தில் கைரேகை பதிவு மற்றும் விண்ணப்பிக்கும் போது கைரேகை பதிவு என 3 இடங்களில் கைரேகை பதிவுகளை அமல்படுத்த வேண்டும். இதனையடுத்து Face Detector போன்ற நவீன கருவிகளை பயன்படுத்தியும் முறை கேடுகளை தடுப்பதோடு தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை எளிதாக்கி சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Categories

Tech |