Categories
மாநில செய்திகள்

இனி இப்படிதான் மழை பெய்யும்…. தமிழ்நாட்டின் வெதர்மேன் தகவல்….!!!!

இனி  கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும்  மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று  அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. மேலும் சில இடங்களில் தற்போது வரை பருவ மழை பெய்து வருகிறது.  வட சென்னையில்  அடுத்த 36 மணி நேரத்தில் 300மி  மீக்கு அதிகமாகவும், தென் சென்னையில்  சராசரியாக 150 மிமீ   மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நேற்று இரவு பெய்த  மழையால் மீண்டும் வடசென்னையில் இரட்டை சதம் வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இதனையடுத்து பெரம்பூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், ராயபுரம், கொளத்தூர், மணலி உள்ளிட்ட இடங்களில் கடந்த 36 மணி நேரத்தில் 300-350 மி.மீ.  வரை மழை பெய்துள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி. நகர், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் கடந்த 36 மணி நேரத்தில் 150-200 கிலோமீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில்  இரவு முழுவதும் மேகங்கள் நெல்லூர்-ஸ்ரீஹரிகோட்டா பகுதி வரை நகர்ந்தன. சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் மேலும் சில மேகங்கள் உள்ளது. ஆனால் அச்சுறுத்துதலாக தோன்றவில்லை. மேலும் மலை தொடரும் என்றால் கடந்த இரண்டு நாட்கள் போல் இல்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |