Categories
Tech டெக்னாலஜி

இனி இன்ஸ்டாவில் இதை யாரும் பார்க்க முடியாது….. பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்…..!!!!

இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் மற்றும் முகச்சுழிப்பை ஏற்படுத்துபவர் போன்ற பதிவுகளை பார்க்காத வகையில் கட்டுப்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை தற்போது கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கினை தொடங்கும் போது தானாகவே less என்ற முறையில் தான் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியும். ஏற்கனவே 16 வயதிற்கு உட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு standard என்ற பிரிவின் படி வரையறுக்கப்பட்ட பகுதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் சுயமாக less செய்து கொள்ளும் வசதி உள்ளது.

எப்படி LESS செய்வது?

முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் புரொபைல் பக்கத்திற்கு செல்லவும்.அதில் ‘Settings’ ஐ தேர்வு செய்யவும்.அதனுள் இருக்கும் ‘Account’ ஐ தேர்வு செய்யவும்.தொடர்ந்து ‘Sensitive content control’ ஐ தேர்வு செய்யவும்.அதில் உங்களுக்கு ‘Standard’ என்ற பிரிவு தேர்வு செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக அதன் கீழுள்ள ‘less’ பிரிவை கிளிக் செய்யவும்.

Categories

Tech |