jio நிறுவனமானது டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்பு நீக்கியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு போர்ட்போலியோவில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது. எனினும் ரூபாய். 1,499 மற்றும் ரூ.4,199 என 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா அணுகல் கிடைத்தது.
இப்போது அந்த சலுகையும் இத்திட்டங்களில் இருந்து ஜியோ நிறுவனம் நீக்கி உள்ளது. ஆகவே இனிமேல் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் சந்தாவை வாடிக்கையாளர்கள் பெறமாட்டார்கள். தற்போது டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ரீசார்ஜ் திட்டத்தை பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இதற்காக நீங்கள் ஏர்டெல் (அல்லது) வோடாஃபோன் ஐடியா திட்டங்களை நாடலாம்.