காபூல் விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய அமெரிக்க விமானப்படை அங்கிருந்த தங்களுக்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாக்கிய வாகனங்கள், ஏவுகணைகள் போன்ற 73 வாகனங்களை செயலிழக்க செய்து விட்டு சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை கடந்த 15ஆம் தேதி முதல் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்க படைகள் பல முயற்சிகளை செய்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறினர். அதற்கு முன்னதாக காபூல் விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க நாட்டிற்குச் சொந்தமான விமானங்கள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஏவுகணைகள் போன்ற 73 வாகனங்களை இனி செயல்பட முடியாத அளவிற்கு செயலிழக்க செய்து விட்டு சென்றுள்ளனர்.