கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி மூன்று வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்படைந்ததாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தேவையில்லாத செலவுகள் அதிகரித்து இருப்பதாக கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கையில் நடிகர்கள் ஒப்பந்தப்படி சரியான நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.
தயாரிப்பாளர்களுக்கு தினமும் தகவல் கொடுக்க வேண்டும். இனிமேல் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் எதுவும் கிடையாது. நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பயண செலவு, தங்குமிடம், உணவுகள் எல்லாமே அடங்கும். நடிகர்களுடனான ஒப்பந்தத்தில் ஊதிய விவரங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் பொழுது ஓடிடி குறித்து விபரங்கள் இடம் பெறாது. படங்கள் தியேட்டர்களில் வெளியாகிய குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்கு பின்னரே ஒடிடியிள் வெளியாக வேண்டும். இந்த நடைமுறை அனைத்தும் செப்டம்பர் பத்தாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.