Categories
தேசிய செய்திகள்

இனி இது மட்டும் போதும்…. ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அனைத்திற்கும் தேவைப்படுவதால் இதனை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.பல இடங்களில் தனிநபர் சரிபார்ப்புக்கு ஆதார் கார்டு கேட்கப்படுவதால் பலரும் ஒரிஜினலாக வைத்திருப்பார்கள், அதில் சிலர் டிஜி லாக்கர் போன்ற ஆப் மூலமாக அல்லது ஸ்மார்ட் போனில் டாக்குமெண்டாக வைத்திருப்பார்கள். பல வடிவங்களில் ஆதார் கார்டை வைத்திருந்தாலும் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால் தற்போது போலி ஆதார் கார்டை வைத்து பல மோசடிகள் நிகழ்கின்றன.

இப்படியான நிலையில் ஆதார் கார்டில் உள்ள க்யூ ஆர் கோடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் அதனை போலியாக உருவாக்கி ஏமாற்றுவது மிக சிரமமான ஒன்று. எனவே உங்களின் ஆதார் கார்டில் இருக்கின்ற கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலமாக அது அதிகாரப்பூர்வமானது என்பதை எளிதில் கண்டறிந்து விடலாம். இதனை தனிநபர் சரிபார்ப்பு விஷயங்களில் பயன்படுத்தலாம். கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் போது அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் ஆதார் சரி பார்ப்பேன் qr கோர்டை ஏற்றுக்கொள்ளலாம் என்று ஆதாரம் அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |