Categories
தேசிய செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. மீண்டும் பரவும் கொரோனா…. இன்று வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிதாக 2,183 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் முக கவசம் அணிவது உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாயம் என்று அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.

மீரட், காசியாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உத்தர பிரதேச மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Categories

Tech |