காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் பல காலி பணியிடங்கள் இருப்பதால் காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ் மொழி காலத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்விலும் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு பொது தமிழ் தாள் மட்டுமே தகுதி மற்றும் மதிப்பீடு தேர்வாக அமைக்கப்பட்டுள்ளது . இதில் முதல் தாள் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த முதல் தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். காவலர் தேர்வு இரண்டாம் தாள் வழக்கம்போல் 50 பொது அறிவு வினாக்களும் 30 உளவியல் பிரிவு வினாக்களும் இடம்பெறும். இதில் முதல் தாளில் 40 மதிப்பெண் பெறவில்லை எனில் இரண்டாம் தாள் திருத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.