இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான இஎம்ஐ பணப் பரிமாற்ற கட்டணம் மாறும். தற்போது இஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கு 99 + வரி வசூலிக்கப்படும் நிலையில், இனி 199 + வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கான பேமென்ட்-க்கான பிராசஸிங் கட்டணம் 99 + வரி என கட்டணம் நிர்ணயித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வருகிறது.