Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு வாய்ப்பில்லை….. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

நாட்டில் தற்போதைக்கு ரயில் கட்டணம் உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் ஐந்து இடங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறைக்கு போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைபர்லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு ஹைபர்லூப் ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டில் தற்போது ரயில் கட்டணம் உயர வாய்ப்பில்லை.

புறநகர் ரயில்களில் ஏசி வசதி அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் எழும்பூர், காட்பாடி, மதுரை,  ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 ரயில்களில் 760 கோடி செலவில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யபட உள்ளது. வனவிலங்குகளை பாதிக்காத வகையில் ரயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யானைகள் கடக்கும் இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. யானைகளை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். செலவு எங்களுக்கு முக்கியம் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |