தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சிறிது காலம் உடற்கல்வி வகுப்பு தடைசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பாக மீண்டும் உடற்கல்வி வகுப்பை தொடங்க வேண்டும் என்று பள்ளிகல்வி துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பள்ளிகளில் 6 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு நடத்த வேண்டுமென்றும் 10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு காரணமாக உடற்கல்வி வகுப்பு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.