Categories
மாநில செய்திகள்

இனி இதற்கும் TNPSC தேர்வு தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள் போன்றவற்றிற்கு அந்தந்த துறையின் மூலமாகவே இதுவரை நேரடியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்களுக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்துக் கழகம், குடிசை மாற்று வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பணியாளர் சேர்ப்பு TNPSC மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |