தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக வேளாண் நலத்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுடைய நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கூறுகையில், விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்களான மரங்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்படும். அந்த வகையில் வேம்புக்கு பயிருக்கு ஹெக்டருக்கு ரூபாய் 17,000, புங்கன் பயிருக்கு எக்டருக்கு 20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடவு செய்த மூன்று வருடங்களுக்கு ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.