கேரளாவில் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கேரள அரசு கடுமையான தடை விதித்தது. வகுப்பறைகளிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
வகுப்பு நேரத்தில் மாணவர்களை தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்டங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது, என்றார்.