Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே…. அதிகாரிகள் அறிவிப்பால் ஷாக் ஆன விவசாயிகள்….!!!!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போதுவரை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் பொன்னாப்பூர், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், நெல் மணிகள் அனைத்தும் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதனால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த மழைக்கே நெல்மணிகள் முளைத்து விட்டதாகவும், 10 நாட்களாக பணியில் நெல்மணிகள் கிடப்பதால் நெல்லை காய வைப்பது, காவல் காப்பது என ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை கூடுதல் செலவு ஏற்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று கேட்டால், தங்களுக்கு அரசு உத்தரவு எதுவும் வரவில்லை என கூறுகின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம். எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து பழைய முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும்.

ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் ஈரமான நெல் தங்கிவிடும். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். இதுபற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் உமா மகேஸ்வரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை மாவட்டத்தில் 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை உயரும் எனவும், விவசாயிகள் ஆன்லைன் முறையில் எந்த குழப்பமும் இன்றி பதிவு செய்வதற்கு, கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |