Categories
தேசிய செய்திகள்

இனி ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி…. மம்தா பானர்ஜி மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் “கிரிஷிக் பந்து” திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் நிலத்துக்கு மேல் நிலம்  வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது, இந்நிலையில் தற்போது அந்த தொகையானது இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.10000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதற்கு முதல் கட்டமாக ரூபாய் 290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 68.38 லட்சம் சிறு குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தை விட எங்களுடைய நிதி உதவி திட்டம் மேலானது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |