Categories
மாநில செய்திகள்

இனி அரசு ஊழியர்கள் முறைகேடில் ஈடுபட்டால்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முறைகேடு செய்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு ஊழியர்கள் யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல நிகழ்வுகளில் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் துரை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்றவாளக்கு நிலுவையில் இருக்கும் போது அதே முறைகேடு தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி அரசு ஊழியர் செய்யும் முறைகேடு தொடர்பான குற்ற வழக்கும் துறை ரீதியான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படலாம்.

வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உரை ரீதியான நடவடிக்கைக்கு அசல் ஆவணங்களின் உண்மை நகலை வாங்கி நடவடிக்கையை தொடரலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஊழியரை டிஸ்மி செய்வது போன்ற பெரிய முடிவை குற்ற வழக்கு விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கலாம். குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அந்த ஊழியரை விசாரிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பு துறை விசாரணை முடிவை பாதிக்காது. எனவே இனி அரசு ஊழியர்கள் யாராவது முறை கேட்டில் ஈடுபட்டால் உடனே துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |