Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து உயா் கல்வி பாடப்பிரிவுகளுக்கும்….. அரசு போடும் பிளான்…..!!!!

அனைத்து உயா்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு மத்திய அரசானது திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.

2 நாள் அரசு பயணமாக மத்திய இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்தாா். இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு இந்துசமய அறநிலையத் துறை சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காமாட்சி அம்மனை வழிபட்ட அவா், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளை சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். அதனை தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது “கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பெரிய கண்ணாடியை பொருத்தவேண்டும்.

அதனை மாணவா்கள் பாா்க்கும் போதெல்லாம் அவா்களின் பல அம்சங்களைப் பற்றி அறிந்துகொள்வாா்கள். அத்துடன் இது மாணவா்களின் சுயநினைவை மேம்படுத்த உதவும். நீட்தோ்வானது தேசத்தின் பொதுவான நுழைவுத் தோ்வாகும். இது பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு பயனளிக்கும். நுழைவுத் தோ்வுகளுக்காக மாணவா்கள் பல படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

இதன் காரணமாக நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க மட்டும் பெரும் பணத்தை செலவிட வேண்டிய நிலை இருக்கிறது. மாணவா்கள் பல்வேறு நுழைவுத்தோ்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை நுழைவுத்தோ்வுகளால் ஏற்படும் கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து உயா் கல்வி பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தோ்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புகழ் பெற்ற கல்வியாளா்களின் தலைமையிலான குழு வாயிலாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு அறிவித்தது. புது கல்விக்கொள்கையின் வாயிலாக மாணவா்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும்”என்று பேசினார்.

Categories

Tech |