சென்னையில் நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும், திருமணம், கோவில் திருவிழா, சினிமா குறும்படம் தயாரித்தல் போன்ற நிகழ்வுகளின் போதும் காவல்துறையின் உரிய அனுமதி பெற்ற பிறகு ட்ரோன்கள் பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க அனுமதி உள்ளது.
இந்த நிலையில் சமீபகாலமாக ஒரு சில தடை செய்யப்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்கவிட்டு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார்கள். எனவே இனிவரும் காலங்களில் உரிய அனுமதி இல்லாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட உரிய இடங்களில் காவல்துறையின் அனுமதி பெற்று பறக்க விட வேண்டும். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜுவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.