Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமே யாரும் இப்படி பண்ணாதீங்க…. அபராதம், 6 மாத சிறை…. கடும் எச்சரிக்கை….!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் அபராதமும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும். செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் கால்நடை மருத்துவர்கள் என கூறி சிகிச்சை அளிக்கின்றனர். போலி கால்நடை மருத்துவர்கள் குறித்த தகவலை அருகிலுள்ள போலீசில் புகார் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |