அன்றாட வாழ்வில் முட்டை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் உணவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக முட்டை உள்ளது. அதனை அதிக அளவிலான மக்கள் சாப்பிடுகிறார்கள். முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சூப்பர் புட் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதிக முட்டைகளை சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கத்தார் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் 50 கிராமுக்கு அதிக அளவில் முட்டை சாப்பிட்டு வந்தால் 60% நீரிழிவு நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் முட்டை உட்கொள்வதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.