Categories
தேசிய செய்திகள்

இனிமே இந்தியர்கள் யாரு வேணாலும் போலாம்… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் விசா வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஊரடங்கு அமல்படுத்தின. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்ல முடியாத வகையில் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளுடன் விமான சேவை தொடங்கப்பட்டது.

அதன்படி  இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் விசா வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை ரஷ்ய தூதரக இணையதளத்தில் இந்தியர்கள் பதிவேற்ற வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனை சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.

Categories

Tech |