சாலை விதிகள் முழுமையாக தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுனர் உரிமம் தர வேண்டும் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க சாலை விரிவாக்கம் அவசியமென்றும் ஆனால் நிலம் இல்லாதவர்கள் கூட பச்சை துண்டு போட்டு கொண்டு பிரச்சனை செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர்,அனைத்து இரண்டு வழிச்சாலைகளையும் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்தார்.
மேலும் சாலையில் நாம் ஒழுங்காக சென்றால் கூட பிற வாகனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டாலும் விபத்துகள் நடந்துவிடும். மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணிக்க கூடாது. லைசென்ஸ் பெற்ற பிறகுதான் மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டவேண்டும் என தெரிவித்துள்ளார்.