செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திமுகவுக்கு மாற்றாக அதிமுக, அதிமுக மாற்று திமுக என வழியே இல்லை என்று மக்கள் தேடக்கூடாது. வழியாக உங்கள் பிள்ளை நாங்கள் வந்து 10ஆண்டுகள் உறுதியாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்களை கவனிக்கனும். தத்துவக் கோட்பாட்டில் தான் நீங்கள் முரண்பாட்டை பார்க்க வேண்டும்.
திமுக தான் திராவிட கட்சிகளின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து அதிமுக ஒரு துளி கொள்கையில் மாறுபடுகிறது, இல்ல அதிமுகவில் இருந்து திமுக இந்த இடத்தில் மாறுபடுகிறது என்று சொல்ல முடியுமா ? அந்தக் கொடியில் அண்ணா இருப்பார், இங்கு இல்லை. இதைத் தவிர வேறு ஏதாவது வேறுபாடு கொள்கை மாறுபடுததா ? இங்கும் ஊழல், அங்கு ஊழல், இங்கே பஞ்சம், அங்கே பஞ்சம், இங்கே லஞ்சம், அங்கேயும் லஞ்சம்.
இங்கும் திருட்டு அங்கும் திருட்டு, இங்கயும் இருட்டு, அங்கேயும் இருட்டு, முறையற்ற நிர்வாகம், இங்கேயும் மணல் கொள்ளை, வளக் கொள்ளை எல்லாம் இருக்கிறது. அப்போ என்ன இதில் கொள்கை மாற்று இருக்கிறது. உதயசூரியன் விட்டால் இரட்டை இலை என்று தேட கூடாது. விட்டால் விவசாயம் சின்னம் இருக்கிறது. இனி இந்த நிலத்தில் போட்டி திமுகவா ? இல்லை நாம் தமிழரா என்று தான் நடக்கும்.
திராவிட கோட்பாடா ? இந்திய கோட்பாடா ? தமிழ்த்தேசிய கருத்தியலா? இது என் தேசம், நாடு தமிழ் நாடு, தேசம் தமிழ்த்தேசம். இங்கு வாழ்கின்ற குடிகள், மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, தொன்று தொட்ட வேளாண்மை, வழிபாட்டை மீட்பது, காட்டு வளம், கனிம வளம், நீர் வளம், கடல் வளம், மலை வளம் இவற்றை பாதுகாத்து வைப்பது, பாதுகாப்பான சுற்றுசூழல், சுவாசிக்க நல்ல காற்று, குடிக்க நல்ல நீர், பொருளியல் மேம்பாடு, தொழில் வளர்ச்சி இதையெல்லாம் தான். இதற்கெல்லாம் ஒரு அரசியல் இருக்கிறது, அது தமிழ் தேசிய அரசியல்.
ஸ்டாலினே மேடையில் திருச்சியில் பேசும்போது தமிழ் குடிகள் என்று சொல்கிறார். ஏன் திராவிட குடிகள் என்று சொல்லவில்லை. தமிழ் குடிகள் என்ற வரத்தை எங்கிருந்து வருகின்றது. இவ்வளவு நாட்களாக எங்கே சென்றது தமிழ் குடிகள் என்ற வரத்தை. தமிழர்களே திரண்டு வாருங்கள் என்று தான் மாநாட்டுக்கு அழைக்கிறார்களே தவிர, திராவிடர்களே திரண்டு வாருங்கள் என்று சுவரொட்டிகள் ஒட்டுவதில்லை, சுவரில் எழுதுவதில்லைலை, ஏமாற்று. அதனால் தான் அந்த கருத்தியலை வலுவை நாங்கள் எதிர்க்கிறோம். இனி தேட மாட்டார்கள் மக்கள். இனிமேல் DMK vs NTK தான் என தெரிவித்தார்.