பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் விலகுவது உறுதி செய்யப்பட்டது.
பிரிட்டனின் பக்கிங்காம் என்று அரண்மனையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளவரசர் ஹரியுடன் நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பின்பு இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகியதால் பொதுச்சேவை உடனான தொடர்புகள் குறித்த பொறுப்புகள் மற்றும் கடமைகளை இனிமேல் தொடர முடியாது என்று பிரிட்டன் மகாராணி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி நடத்திய கவுரவ ராணுவ நியமனங்கள் மற்றும் Royal Patronages போன்ற அதிகாரத்திற்கான கடமைகள் மகாராணியாரிடம் தற்போது ஒப்படைக்கப்படும்.
அதன் பின்பு இந்த அதிகாரத்திற்கு உரிய கடமைகள் அரச குடும்பத்தினுடைய உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் எடுத்துள்ள இந்த முடிவால் அனைவரும் வருத்தம் அடைந்துள்ளனர். எனினும் எப்போதும் இவர்கள் இருவரும் மிக விருப்பப்பட்ட உறுப்பினர்களாக இருப்பர் என்று பக்கிங்காம் அரண்மனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதாவது இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகப் போவதாக கடந்த வருடம் அறிவித்ததற்கு பின்பு அவர்களுக்கு முடிவினை மறு பரிசீலனை செய்வதற்காக 12 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவரும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். அதன்பின்பு தற்போது இம்முடிவு உறுதி செய்யப்பட்டதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.