தாயின் கள்ளக்காதலன் 17 வயது மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹலசூரு என்ற பகுதியை சேர்ந்த கீதா என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் வீட்டு வேலையை பார்த்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கீதாவிற்கு அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி அந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனியாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது கீதாவின் 17 வயதான மூத்த மகனுக்கு பிடிக்கவில்லை. இது குறித்து தனது தாயிடம் பலமுறை கூறியுள்ளார். இருப்பினும் சக்திவேல் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
சம்பவம் நடந்த தினத்தன்று சக்திவேல் வீட்டிற்கு வரும்பொழுது 17 வயது சிறுவன் அவருடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து வந்து அந்த சிறுவனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்ட தாய் கீதா மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் கீதா புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டோ டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையின் போது கள்ளக்காதலியின் வீட்டிற்கு செல்வதற்கு மகன் இடையூறாக இருந்த காரணத்தினால் அவரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.