இந்தியா ரஷ்யா இடையே 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி, இரு நாடுகளும் இணைந்து 5,00,000 ஏகே 23 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு உச்சி மாநாடு, கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் 21 -வது உச்சிமாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக நேற்று அதிகாலை டெல்லி வந்த ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் சேர்க்கே சுவர்க்யூ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனின் சந்தித்து பேசினார். அப்போது உத்திரபிரதேச மாநிலம் அமைதியில் உள்ள பாதுகாப்புத்துறை தொழிற்சாலையில் இரு நாடுகளும் இணைந்து 5,00,000 ஏகே 23 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தொழில்நுட்ப உறவுகளை தொடருதல் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அதைப்போன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா-ரஷ்யா இடையிலான உறவுகள் தனி சிறப்பானவை என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.