Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் இப்படி பண்ண கூடாது…. அதிகாரிகளின் எச்சரிக்கை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோர கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் முத்தாம்பாளையம் புறவழி சாலையில் இருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் இருந்த பூக்கடை, தள்ளுவண்டி கடை, பழக்கடை, விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தன்ராஜ், உதவி பொறியாளர் வசந்தபிரியா ஆகியோர் பார்வையிட்டு மீண்டும் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Categories

Tech |