சுவிட்சர்லாந்தில் வாழும் பிற நாடுகளில் பிறந்த மக்களுக்கு குடியுரிமை அளிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிற நாடுகளில் பிறந்த 25 வயதிற்குட்பட்ட நபர்கள் ஸ்விஸ் நகரம் சூரிச்சில் வாழும் பட்சத்தில் அவர்களிடம் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முன்புவரை பிற நாடுகளில் இருந்த மக்கள் ஸ்விஸ் குடியுரிமை பெற வேண்டுமெனில் 250 சுவிஸ் பிராங்குகள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டில் பிறந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற இந்த விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பிற நாடுகளில் பிறந்த மக்களும் சூரிச்சில் வாழ்வதற்கான குடியுரிமை பெறுவதற்கான நடைமுறை முழுமை அடைவதே ஆதரிப்பதற்காக இந்த விதி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.