நொய்டாவில் வீட்டிலிருந்த குப்பைகளை சேகரிப்பதற்கு க்யூ ஆர் கோடு மற்றும் ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருப்பது நொய்டா. நொய்டாவை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு அதிகாரிகள் ஒரு முடிவு செய்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து குப்பைகளை சேகரிப்பதற்கு கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி நொய்டாவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டிருக்கும். குப்பையை சேகரித்து வரும் நபர்கள் அந்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து கொள்வார்கள்.
அப்போது வீட்டு உள்ள நபருக்கு தகவல் சென்றடையும். மாதத்திற்கு ஒருமுறை வீட்டு நபர் அதிகாரியிடம் ஸ்கேன் செய்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு குப்பைகளை சேகரிப்பதற்கு நொய்டா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். வியாபாரிகளிடமிருந்து இதே முறையில் குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குப்பையை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்திவிட்டால் வாகனம் எங்கு செல்கின்றது என்ற இடத்தைத் துல்லியமாகக் கணித்துக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.