Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இனிமேல் அவர் கூட என்னால வாழ முடியாது… பெண் எடுத்த விபரீத முடிவு… நாகையில் பரபரப்பு..!!

நாகையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியமனகொடி கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயப்பிரியா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ்-க்கும், ஜெயபிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயபிரியா மனவேதனையில் இருந்த வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாராவது நேரத்தில் ஜெயப்பிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் ஜெயப்பிரியாவிற்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து கரியாப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |