Categories
உலக செய்திகள்

இனிமேல் அலட்சியமா இருக்காதிங்க…. வீட்டின் அடித்தளத்தில் இருந்து கேட்ட குறட்டை சத்தம்…. கற்பனை என கருதிய உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வீட்டின் கீழ் தளத்தில் பதுங்கியிருந்த ஒரு தாய் மற்றும் 4 குட்டி கரடிகளை தொண்டு நிறுவனம் காட்டுக்குள் சென்று விட்டுள்ளது

அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஒரு குடும்பத்தினருக்கு தன் வீட்டின் கீழ் தளத்தில் இருந்து குரட்டை போன்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த சத்தத்தை பொருட்படுத்தாமல் தன்னுடைய கற்பனையே எனக்கருதி அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என அறியாமல் அப்படியே விட்டு விட்டனர்.

இதனை அடுத்து திடீரென ஒருநாள் தன் வீட்டின் கீழ்தளத்தில் ஒதுக்குப்புற இடத்தைப் பார்த்த போது அங்கு ஒரு தாய் கரடியும் 4 குட்டி கரடியும் உறக்க நிலை முடித்து வெளியே செல்ல தயாராக இருந்ததையும் கண்டனர். இதனை தொடர்ந்து தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த கரடிகளை காட்டுக்குள் கொண்டு சென்றுவிட்டுள்ளனர்.

Categories

Tech |