தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
நேற்று தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் இனிப்பு பலகாரங்கள் முறையாக தயாரிக்கப்படுகின்றதா என ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதன்படி இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகின்றதா? வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றதா? என சோதனை மேற்கொண்டார்கள். மேலும் தர்மபுரியில் இருக்கும் பேக்கரிகள் மற்றும் இனிப்பு கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோல கடத்தூர், மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.