Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனிதான் சம்பவமே…. சிஎஸ்கே பயந்துடுச்சுன்னு நினைச்சீங்களா?…. சாம்கரன் அதிரடி பேட்டி….!!!!

ஐபிஎல் 15வது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே தொடர்ந்து தோல்வியை சந்தித்து 8வது இடத்தில் நீடித்து வருகிறது. எனவே ஏப்ரல் 9ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையிலான மோதலில் சிஎஸ்கே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சாம்கரன், “ஜடேஜா கேப்டன் பதவிக்கு புதியவர். போதுமான அனுபவம் அவருக்கு இல்லை. இருப்பினும் சிஎஸ்கே அணியில் அனுபவமுள்ள வீரர்கள் அதிகம் உள்ளதால் ஜடேஜாவுக்கு அது நல்ல விஷயம். மேலும் போதுமான ஆலோசனைகளும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிஎஸ்கே அணி மூன்று தோல்விகளை சந்தித்துள்ளதால் வீரர்கள் உடைந்துபோய் விடமாட்டார்கள். அடுத்த போட்டியில் அவர்கள் பயத்துடன் களமிறங்க மாட்டார்கள். அடுத்த போட்டியில் என்ன செய்ய வேண்டும் ? என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். கடந்த சீசனில் ருதுராஜ் நம்ப முடியாத வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் இந்த வருடம் சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அனுபவ வீரர்கள் தோனி, ஜடேஜா, ராபின் உத்தப்பா போன்றவர்கள் பேட்டிங் பிரச்சனையை சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |