மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெ., நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்து பேசிய EPS சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், “ஜெயலலிதா மறைந்த இந்த நன்னாளில்” என்று பேசினார். இந்நாளில் என்பதற்கு பதிலாக அவர், நன்னாள் என்று கூறினார். இதைக் கேட்டு அவரின் ஆதரவாளர்களும், எந்தவித ரியாக்ஷனும் செய்யாமல் ”நன்னாளில்” என்றே உறுதி மொழி எடுத்தனர். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதைப் பற்றி உங்கள் கருத்து?