வோடபோன் ஐடியா நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ‘விஐ’ (வோடபோன் ஐடியா) நிறுவனம் தொடர்ந்து போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி ரூ.598-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டத்தின் விலை ரூ.649 ஆகவும், ரூ.699-க்கு வழங்கப்பட்டு வந்த திட்டத்தின் விலை ரூ.799 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மகாராஷ்டிரா, கோவா, கொல்கத்தா, சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.