அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் 60 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எனவே இனி அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க முடியாது. மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.