குற்றால அருவியில் 31-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்கள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாதலங்களில் வரும் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொது மக்கள் குளிப்பதற்குதடை விதிக்கப்படுகிறது. பொது மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Categories
இந்த 3 நாட்கள் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!!
