Categories
மாநில செய்திகள்

இந்த 10 மாவட்டங்களில்… வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |