Categories
மாநில செய்திகள்

இந்த விவகாரத்தில் மாமியார் பேச்சை கேட்காதீங்க!…. அட்வைஸ் பண்ண அமைச்சர்….!!!!!

காஞ்சிபுரம் செவிலிமேட்டில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 300-க்கும் அதிகமான பெண்களுக்கு சமுதாய வளைகாப்புவிழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் போன்றோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்கு வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர்.

இந்நிலையில் மாற்று மொழிகளின் ஆக்கிரமிப்பால் தமிழ் பெயர்களை அழிய விடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் அன்பரசன் உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “தமிழ் பெயர்கள் வைக்கும் விவகாரத்தில் மாமியார் பேச்சு, ஜாதகக்காரர் பேச்சு என யார் பேச்சையும் கேட்க வேண்டாம். தமிழில் எத்தனையோ அழகான பெயர்கள் இருக்கிறது. ஏராளமானோர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட முன்வராததை நினைக்கும் போது எனக்கு வயிறு எரிகிறது என்று கூறினார்.

Categories

Tech |