உக்ரைனில் உள்ள இரண்டு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை இந்த வார இறுதியில் நடத்த கிளர்ச்சி படை தலைவர்கள் திட்டமிட்டு இருக்கின்றார்கள். நேட்டோவில் இணையை எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஆறு மாதங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இந்த சூழலில் கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகின்றது. கிழக்கு உக்ரைனில் உள்ள லோகன்ஸ் டொனாட்ஸ் பகுதிகளில் பிரிவினைவாத தலைவர்கள் இந்த வார இறுதியில் இந்த பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
மேலும் இந்த வாக்கெடுப்பு வெற்றியடைந்தால் இந்த இரண்டு பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைக்கப்படும் ஆனால் மேற்கத்திய நாடுகள் இதை அங்கீகரிக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீப நாட்களாக போரில் ஆதிக்கம் செலுத்தி ரஷ்யா கைப்பற்றிய பெரும் பகுதிகளை மீட்டிருக்கிறது. மேலும் உக்ரைனில் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா தனது எல்லை வரை பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தினால் மீண்டும் மோதல் அதிகமாகும் என்று அபாயம் ஏற்பட்டுள்ளது.