Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த வயதிலும் அந்தரத்தில் தொங்கும் எஸ்.ஏ.சி”…. பணியின் மீது கொண்ட ஆர்வம்…. பாராட்டும் ரசிகாஸ்…!!!!!

இயக்குனர் எஸ்ஏசி செய்த காரியத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் ஹைதராபாத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் நேரில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வர முடியவில்லை.

தந்தை மற்றும் மகனுக்கும் இடையே சில பர்சனல் விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொதுவில் கூறமுடியாது. என்னுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நான் போனதுக்கே திருக்கடையூரில் நல்ல கூட்டம் விஜய் வந்திருந்தார்கள். அவர் வந்திருந்தா என்னவாகி இருக்கும். நாங்கள் சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடினோம். காதலித்து கரம்பிடித்த மனைவி ஷோபாவுடன் மனநிறைவாக பிறந்தநாளை கொண்டாடினேன் என கூறினார்.

இந்த நிலையில் தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படம் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். சண்டை பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதை பார்த்தவர்கள் இவர் இந்த வயதிலும் பணியில் ஆர்வம் காட்டுகிறாரே என பாராட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |