ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வங்கி சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகள் ஆதார் பான் இணைப்பை கட்டாயமாக்கி உள்ளன.
இதற்கு மத்தியில் கொரோனா பரவல் காரணமாக ஆதார் -பான் கார்டு இணைப்பு பெற கடைசி நாள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் பான் இணைப்பு இல்லாமல் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை வங்கி வாடிக்கையாளர்கள் இணைக்கும்படி பேங்க் ஆஃப் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். எனவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.