எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாக மூட வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அரசின் நீர்வளத்துறை,நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு எச்டிஎப்சி வங்கியில் உள்ள அனைத்து வங்கி கணக்குகளையும் மூடக்கோரி அலுவலக குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது.ஹெச்டிஎஃப்சி இன் வங்கியின் கணக்குகளை மூடுவதற்கு அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கும் கோரிக்கையுடன் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு நகல் அனுப்பப்பட்டுள்ளது.
எச்டிஎப்சி வங்கி சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில வங்கி உத்தரவாதங்களை வழங்கியதாக குறிப்பிட்ட நிர்வாக பொறியாளர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எச்டிஎப்சி வங்கியில் எந்த வங்கிக் கணக்கும் வைக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் கூடுதலாக சில ஊழியர்கள் எச்டிஎப்சி வங்கியில் தங்கள் சம்பள கணக்கை திறந்திருந்தால் அவர்கள் வற்புறுத்தப்பட்டு துறையின் நலனை கருதி hdfc வங்கியில் தங்கள் கணக்குகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.